தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலநது கொண்டு ரசிகர்களிடையே பிரபல்யமானவர் தான் யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சியில் நடிகர் மகத்துடன் இணைந்து இவர் செய்த சேட்டைகள் எல்லாம் ரசிகர்களை பெரிதும் முகம் சுழிக்க வைத்தது. அத்தோடு காதல் சர்ச்சைகளிலும் அடிக்கடி சிக்கி வருகின்றார்.
இதனை அடுத்து பல கவர்ச்சித் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் கடந்த ஆண்டு பாரிய விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் இவரது உயிர்த்தோழி இறந்தார். அத்தோடு பலத்த காயங்களுக்குள் உள்ளான இவர் தற்பொழுது மீண்டும் குணமடைந்து நடிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்த நிலையில் நடிகர் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் உடன் யாஷிகா தற்போது காதலில் இருக்கிறார். அவருக்கு யாஷிகா முத்தம் கொடுக்கும் போட்டோ ஒன்றும் சில தினங்களுக்கு முன்பு வைரல் ஆனது.தற்போது யாஷிகா அவரது காதலர் உடன் லாங் ட்ரைவ் கிளம்பி இருக்கிறார்.
அவர்களது போட்டோ தற்போது வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இவர்கள் இருவரும் உண்மையாகவே காதலிக்கின்றார்களா எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!