• Nov 10 2024

லைஃப்னா கஷ்டம்‌ இல்ல கஷ்டம் இல்லனா லைஃபே இல்ல- நீண்டநாளுக்கு பிறகு தன்னந்தனியாக வீடியோ போட்ட ரவீந்தர்- அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தொகுப்பாளினியாக தொடங்கி பின்னர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மகாலட்சுமி. அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும். இவர்களது திடீர் திருமணம் பலருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

குண்டாக இருக்கும் ரவீந்தரை அழகாக இருக்கும் மகாலட்சுமி எப்படி திருமணம் செய்துகொண்டார் என்பது தான் அனைவரும் எழுப்பிய கேள்வியாக இருந்தது. மறுபுறம் அவர் பணத்துக்கு ஆசைப்பட்டு தான் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டதாக விமர்சனங்களும் எழுந்தன. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக இருவரும் ஜோடியாக பேட்டி அளித்து வருகின்றனர்.


சமீபத்திய பேட்டி ஒன்றில் தங்களது ஹனிமூன் பிளான் குறித்தும் இருவரும் பேசி இருந்தனர். அதன்படி அவர்கள் இருவரும் வருகிற நவம்பர் மாதம் ஐரோப்பா அல்லது லண்டனுக்கு ஹனிமூன் கொண்டாட செல்ல உள்ளதாக தெரிவித்திருந்தனர்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர்கள் சில நாட்களாக எந்த விதமான பதிவுகளையும் போடாமல் இருந்தனர். இப்படியான நிலையில் ரவீந்தர் நீண்ட நாளுக்கு பிறகு ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில் லைஃப்னா கஷ்டம்‌ இல்ல கஷ்டம் இல்லன லைஃபே இல்ல என்று போட்டுள்ளார்.இதனால் ரசிகர்கள் அப்பிடி என்ன தான் கஷ்டம் உங்களுக்கு என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


















Advertisement

Advertisement