• Sep 20 2024

அழகில் மம்மி-டாடியை மிஞ்சிய உயிர், உலக்... விக்கி பகிர்ந்த சூப்பர் கிளிக்ஸ்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

சினிமா ஜோடிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர்கள் விக்னேஷ் சிவன்-நயன்தாரா. நானும் ரௌடித்தான் படத்தின் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டு சில ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்தார்கள்.


திருமணத்தைத் தொடர்ந்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட இவர்கள் இருவரும் தமது குழந்தைகளை சந்தோசமாக வளர்த்து வருகின்றார்கள்.


குடும்ப வாழ்க்கையைத் தாண்டி இவர்கள் இருவரும் தமது சினிமாப் பயணத்திலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். விக்கியைப் பொறுத்தவரையில் சினிமாவில் மட்டுமன்றி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருபவர். அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஏதாவது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார்.


இந்நிலையில் தற்போதும் தனது மகன்களின் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள், நயன்-விக்கி தம்பதியின் குழந்தைகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வருவதாக கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement