தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகி அறிமுகமாகி இன்று உலக நாயகன் என்ற பட்டத்தோடு முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் கமல்ஹாசன். வித்தியாசமான கதாப்பாத்திரங்களைத் தேர்ந்து எடுத்து நடிப்பதில் முக்கிய இடம் வகிக்கும் நடிகராக வலம் வருகின்றார்.
பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்த இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தை இவரது தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அத்தோடு இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்தார்.
கடந்த ஜுன் மாதம் 3ம் திகதி வெளியாகியிருந்த இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வெளியாகி மூன்றே நாட்களில் சுமார் ரூ. 165 கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் வெற்றிக்கு அடையாளமாக நடிகர் கமல் ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மிகவும் உருக்கமான இந்த கடிதத்தை லோகேஷ் கனகராஜ் " Life time settlement letter " என்று பதிவு செய்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ‘இப்பவும் ஆட ரெடியாத் தான் இருக்கிறேன் ஆனால் யாரும் என்னை சேர்க்கமாட்டாங்க’-நடிகர் மன்சூர் அலிகான்
- காதலிக்கிறவங்களுக்கு நடிகை நஸ்ரியா கொடுத்த ஸ்பெஷல் அட்வைஸ்ட்
- தளபதி விஜய்யின் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்
- போட்டோஷூட்டில் எல்லை மீறும் நடிகை சமந்தா- கமெண்டுகளைக் குவித்து வரும் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!