கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தான் விஜய். இவர் தற்பொழுது லியோ என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பக நடைபெற்று வருகின்றது.இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விஜய் பிறந்தநாளான வரும் 22ம் தேதி வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் விஜய் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய்யுடன் பல படங்களில் நடிதது கலக்கியவர் தான் வடிவேலு. வசீகரா, பிரண்ட்ஸ், காவலன், சுறா, பகவதி போன்ற படங்கள் மிக முக்கியமானது. அதேபோல், பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த போக்கிரி, வில்லு படங்களிலும் வடிவேலு காமெடியில் பங்கம் செய்திருப்பார்.
விஜய் - வடிவேலு இருவருக்கும் இடையேயான டைமிங், கவுண்டர், ரியாக்ஷன்ஸ் என அனைத்துமே ஆல்டைம் கிளாசிக்கல். அதேபோல், காதலன் படம் முதலே பிரபுதேவா - வடிவேலு கூட்டணி ரசிகர்களிடம் பிரபலமாகிவிட்டது. இந்நிலையில், போக்கிரியை தொடர்ந்து வில்லு படத்திலும் விஜய், பிரபுதேவா, வடிவேலு கூட்டணி மீண்டும் இணைந்தது. இந்நிலையில், வில்லு படப்பிடிப்பில் விஜய் - வடிவேலு காமெடி காட்சிகளை படமாக்கியுள்ளார் பிரபுதேவா.
மாட்டு வண்டியில் வரும் வடிவேலுவிடம் விஜய் லிஃப்ட் கேட்பது தான் அந்த சீன். அவுட்டோரில் நடைபெற்ற இந்தப் படப்பிடிப்பிற்காக விஜய் சீக்கிரமாகவே ஷூட்டிங் ஸ்பாட் வந்துவிட்டாராம். 8 மணிக்கு ஷூட்டிங் என பிரபுதேவா டைம் பிக்ஸ் செய்துள்ளார். அதற்கேற்றபடி விஜய் 7 மணிக்கெல்லாம் வந்து மேக்கப் போட்டு ரெடியாகிவிட்டாராம்.
வடிவேலு வந்துவிட்டால் ஷூட்டிங் சென்றுவிடலாம் என விஜய்யும் பிரபுதேவாவும் காத்திருந்துள்ளனர். ஆனால், வடிவேலு ரொம்பவே சாகவாசமாக பொறுமையாக வந்துள்ளார். அவர் வரும் போது 9 மணிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. அப்போதும் கூட விஜய்யும் பிரபுதேவாவும் தனக்காக காத்திருப்பது தெரியாமல் ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டிருந்தாராம்.
இதனால் டென்ஷனான விஜய், ஷூட்டிங்கை பேக்கப் செய்துவிட்டு ஹோட்டல் ரூம் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர் வடிவேலுவை பிரபுதேவா தனியாகக் கூட்டிச் சென்று இப்படியெல்லாம் இஷ்டத்துக்கு வந்தால் என்ன அர்த்தம் எனக் கேட்டுள்ளார். இனிமேல் இப்படியெல்லாம் வந்தால் வில்லு படத்தில் இருந்து தூக்கிவிடுவேன் என சொன்னபின்னரே வடிவேலு சரியான நேரத்துக்கு ஷூட்டிங் சென்றாராம் எனன்றும் கூறப்படுகின்றது.
Listen News!