• Sep 20 2024

தனுஷை போலவே இசை வெளியீட்டு விழாவில் கெத்து காட்டிய மகன்கள்- அனிருத் போட்ட குத்தாட்டம்-வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை’திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று ஹாலிவுட் வரை அமர்க்களம் செய்து வரும் நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக தி கிரே மேன் திரைப்படம் வெளியாகியிருந்தது.

மேலும் இவரது நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இப்படத்தை இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர்,இயக்கியுள்ளார்.இப்படத்தில் இவருடன் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராக்‌ஷி கண்ணா, பிரகாஷ் ராஜ் என பெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ளன.

இப்படம் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாகவுள்ளது.செம்ம ஜாலியான கமர்சியல் படமாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தின் தாய் கிழவி உள்ளிட்ட 4 பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் நேற்றைய தினம் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் எதிர்பார்த்ததை போலவே பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றன.நிகழ்ச்சியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமான அளவில் ஏற்பாடு செய்திருந்தது.

ஹாலிவுட் ரேஞ்சுக்கு ரெட் கார்ப்பெட் எல்லாம் போடப்பட்டிருந்தது.மேலும் இந்த நிகழ்ச்சியில் தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் இணைந்து மேடையில் இசைக்கச்சேரி நடத்தினர். இருவரும் வேட்டி சட்டையில் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனிடையே தனுஷின் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவும் நிகழ்ச்சியில் வேட்டி சட்டையுடன் கலந்துக் கொண்டனர். இதில் யாத்ரா, தன்னுடைய தந்தையை அப்படியே பிரதிபலித்தார்.

எனினும் தற்போது தனுஷ், அனிருத் சேர்ந்து பாடிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement