தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளைப் பொறுத்தவரையில் தம்மை போன்றே தமது பிள்ளைகளையும் அத்துறைக்குள் நுழைத்து வருகின்றனர். அதாவது தனது மகன் அல்லது மகள் சினிமா துறையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் தமது பிள்ளைகளை திரைப்படத்தின் மூலமாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக பெரும்பாலான பிரபலங்கள் குழந்தை நட்சத்திரமாகவே தான் அறிமுகப்படுத்தி வருகிறார்கள். தற்போதுவரை அந்த ஒரு செயலை இதுவரைக்கும் செய்யாத நடிகர் என்றால் அது நம்ம தளபதி விஜய் தான்.
எனினும் இவரின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் திரைப்படத்தில் ஒரு நல்ல நிலைமைக்கு வர ஆசைப்பட்டு தந்தை மூலமாக திரைப்படத்தில் அறிமுகமாக விரும்பாமல் தனது படிப்பை சினிமா சார்ந்து படித்து வந்த நிலையில் தற்போது தன்னுடைய சொந்த முயற்ச்சியில் பல குறும்படங்களை எடுத்துள்ளார்.
அதேபோன்று மகள் திவ்ய ஷாஷா தனது சொந்த முயற்சியில் சினிமா துறையில் விருப்பம் இல்லாமல் விளையாட்டு துறையில் ஒரு சாதனை படைக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் பேட்மிட்டன் விளையாட்டில் கலந்து கொண்டு தற்போது வரை பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் தற்போது விஜய்யின் மகன் நடிப்பில் உருவான குறும்பட வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி தளபதி ரசிகர்களினால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!