நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முதல் வெளியாகிய திரைப்படம் தான் விருமன். கிராமத்துக் கதைக்களத்தில் உருவான இப்படத்தை இயக்குநர் மது்தையா இயக்கியிருந்ததோடு இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக நடித்திருந்தார்.
இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி, ஆர் கே சுரேஷ், மனோஜ் பாரதி உள்ளிட்ட பலர நடித்துள்ளனர்.
இதில் வடிவுக்கரசி கார்த்தியின் அப்பத்தாவாக நடித்து பாராட்டை பெற்று வருகிறார். இந்நிலைகள் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய வடிவுக்கரசி, கார்த்திக்கு தேசிய விருது கொடுக்க வேண்டும் என கூறி இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பேட்டியில்,அவர் கூறியதாவது கார்த்தியின் நடிப்பு அவரது தந்தை சிவக்குமாரை மிஞ்சும் அளவிற்கு உள்ளது. எல்லா வாரிசுகளுக்கும் இது வந்துராது. அவரது அப்பா எப்படி சினிமா துறையில் சிறந்து விளங்கினாரோ அதைவிட பல மடங்கு அவங்களோட ரெண்டு பசங்களும் இருக்காங்க .சூர்யா தேசிய விருதை வாங்கிட்டார். இவருக்கு விருது எப்பவோ கிடைத்திருக்க வேண்டும். அதேபோல கண்டிப்பாக கார்த்தியும் தேசிய விருது வாங்குவார் எனக் கூறியுள்ளார்.
Listen News!