• Nov 10 2024

லிங்கா பட நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாம் - இவருடைய கணவர் யார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த பல நடிகைகள் இருக்கின்றனர். இவர்களில் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் பிரபல ஹிந்தி நடிகரும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹாவின் மகளும் ஆவார்.

இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லிங்கா என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம் சரியாக ஓடாததால் சோனாக்ஷி ஹிந்தி சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது சோனாக்ஷி தனது கையில் வைர மோதிரத்துடன் போட்டோ வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களில் ஆண் ஒருவர் அவரது கையை பிடித்து இருக்கிறார்.

"BIG day for me!!! One of my biggest dreams is coming truuuue… and i cant wait to share it with YOUUUU. Cant believe it was SO EZI" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனால் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று கூறி நெட்டிசன்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். இருப்பினும் சோனாக்ஷி உடன் இருக்கும் ஆண் யார் என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர் என்பதும் முக்கியமாகும்.

Advertisement

Advertisement