• Nov 14 2024

லிங்குசாமி சூட்டிங் செட்டில் என்னை அழ வைக்கவில்லை இது தான் நடந்திச்சு-மனம் திறந்த கிருத்தி ஷெட்டி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் நடிகை கிருத்தி ஷெட்டி. இவர் தற்பொழுது லிங்குசாமி இயக்கத்தில் தி வாரியார் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த நிலையில் அண்மையில் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.

அதில் அவர் கூறுகையில் மனிதனுக்கு முதுகெலும்பு எவ்வளவு முக்கியமோ, அது மாதிரி எனக்கு எனது அம்மா. நான் காலையில் எழுவதிலிருந்து தூங்கும் வரை குழந்தை மாதிரி பார்த்துக் கொள்வார் என்று கூறியுள்ளார்.

மேலும் கிருத்தி ஷெட்டி, உங்களை சிலர் கீர்த்தி என்றும் க்ரிதி என்றும் மாற்றி அழைக்கிறார்களே…. அதை எப்படி எடுத்து கொள்கிறீர்கள்? என்று கேட்ட போது பதில் கூறிய இவர் நடிகர் ராம்சரண், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் என்னை கீர்த்தி என்று அழைக்கும்போது, கிருத்தி என்று கூப்பிடுங்கள் என்று சொல்வேன். எனக்கு நடிகை கீர்த்தி சுரேஷை ரொம்ப பிடிக்கும். அவரை போன்று தேசிய விருது வாங்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் என்னை எல்லோரும் கீர்த்தி என்று தான் அழைக்கிறார்கள். இதுவும் சந்தோஷமாக தான் இருக்கிறது. ஏனெனில் தனக்கு பிடித்த நடிகையின் பெயரை சொல்லி அழைக்கும்போது சந்தோஷப்படுகிறேன்.தமிழ் ரசிகர்கள் என்னிடம் அதிக அன்பையும் நல்ல படங்களையும் எதிர்பார்க்கின்றனர் முடிந்தவரை செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

அடுத்தாக உங்களுடைய காஸ்ட்யூமை இந்த படத்தில் யார் கவனித்து கொண்டார்கள்? என்று கேட்ட போது என்னுடைய காஸ்ட்யூமை நானும், அம்மாவும் பார்த்துக் கொண்டோம். என்னுடைய அம்மா தான் முழு ஆதரவு அளித்தார். மனிதனுக்கு முதுகெலும்பு எவ்வளவு முக்கியமோ, அது மாதிரி எனக்கு எனது அம்மா. நான் காலையில் எழுவதிலிருந்து தூங்கும் வரை குழந்தை மாதிரி பார்த்துக் கொள்வார். பாடல்களுக்கு மட்டும் காஸ்ட்யூமை இயக்குநர் லிங்குசாமி ஏற்பாடு செய்தார். அவர் என்னிடம் கூறுகையில், No Reference… நீயே Create பண்ணு என்றார். நானும் அதையே செய்தேன்.என்னுடைய ஸ்டைல் கொஞ்சம் எனப் பதில் கூறியுள்ளார்.

மேலும் புல்லட் பாடல் குறித்து நீங்கள் கூற விரும்புவது என்று கேட்ட போது நடன இயக்குநர் சேகர் எனக்கு ரொம்ப Comfortable Step கொடுத்தார். அவரை பொறுத்தவரை ஆர்டிஸ்ட் ஸ்டைல் பார்த்து, அதற்கேற்ப Step கொடுப்பார். புல்லட் பாடலில் என்னுடைய ஸ்டைல் கொஞ்சம் சேர்த்திருக்கிறேன். 2 நாள் பயிற்சி எடுத்துக் கொண்டேன். பயிற்சி செய்யும்போது கஷ்டமாக தெரிந்த விஷயம், பயிற்சிக்கு பிறகு எளிதாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் இயக்குநர் லிங்குசாமி எனக்கு வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ அனுப்பினார். அதில் 3 சிறுவர்கள் புல்லட் பாடலுக்கு விக் வைத்து, எஸ்டிஆர் பாடுவது போலவும், அருமையாக ஆடியதை பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக இருந்தது எனக் கூறினார் .

சில மீடியாக்கள் செய்தி பரப்பிவிட்டனர். ஆனால் அது உண்மையில்லை. அவர் என்னை ஒன்றும் செய்யவில்லை. நடிகர் ராம், நடிகை நதியா ஆகியோருக்கு தமிழ் நன்றாக தெரியும். ஆனால் எனக்கு 10% கூட தமிழ் தெரியாது. என்னுடைய முதல்நாள் ஷூட்டிங்கின்போது, இயக்குநர் லிங்குசாமி தமிழில் எனக்கு காட்சிகள் பற்றி விளக்கமளித்தார். என்னை பொறுத்தவரை முதலில் நன்றாக செய்தால் மட்டுமே கடைசி வரை நன்றாக இருக்கும் என்று நானே நினைத்துக் கொண்டு பிரஷரை ஏற்றிக் கொண்டேன். முதலில் இயக்குநர் Wavelength Match செய்ய வேண்டும். எப்படி அவர் சொல்வதை புரிந்து கொண்டு, நம்மால் எப்படி நடிக்க முடியும் என்று பயந்தேன். அதுவே எனக்கு மிகப்பெரிய மனஅழுத்தத்தை கொடுத்தது. அங்கு நடந்தது Communication Problem மட்டுமே. என்னுடைய மனஅழுத்தத்தின் காரணமாக எனது கண்களில் கண்ணீர் வந்தவுடன், இயக்குநர் லிங்குசாமி சுற்றி சுற்றி வந்தார். உனக்கு ஒன்றும் பிரச்னை இல்லையே என்று கேட்டார். உண்மையை சொல்லவேண்டுமென்றால் அவர் மாதிரி ஒரு நல்ல மனிதரை பார்ப்பது கடினம் என்றும் அவர் குறிப்பிட்டதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement