தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் காஜல் அகர்வால். இவர் தெலுங்கில் 2007ம் ஆண்டு ரிலீஸான லக்ஷ்மி கல்யாணம் படத்தில் நடித்து பிரபலமானார். மும்பையைச் சேர்ந்த இவர் யூன் ஹோ கயா நா என்ற படத்தில் ஐஸ்வர்யா ராயின் தோழியாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து இவர் பிரபல தொழிலதிபர் கெளதம் கிச்சிலு என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சில மாதங்களுக்கு முதல் பெண் குழந்தையும் பிறந்தது.இந்நிலையில், தற்போது சீனா சென்றுள்ள காஜல் அகர்வால் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.
அப்போது அங்கு தனது மகன் நீல் கிச்சிலுவுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை ஷேர செய்துள்ளார்.ஷாப்பிங் மால் ஒன்றில் தனது மகனை நடக்க வைக்க முயற்சிக்கும் காஜல், நீல் கிட்ச்லுவின் ஒவ்வொரு அடியும் மேஜிக் என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதேபோல் இன்னொரு போஸ்ட்டில் எங்கள் இதயங்களை பறக்கவிடுகிறோம் என்ற கேப்ஷனுடன் தனது மகனை மேலே தூக்கிப் போட்டு பிடிக்கிறார் காஜல். இதனையடுத்து அவர் ஷேர் செய்த போஸ்ட் தான் வைரலாகி வருகிறது.
அதில் காஜல் அகர்வாலின் கணவர் கெளதம் கிச்சிலுவின் கையில் மகன் நீல் கிச்சிலு இருக்கிறார். அப்போது கெளதமை கட்டிப் பிடித்து லிப் லாக் கிஸ் கொடுக்கிறார் காஜல் அகர்வால். கிறிஸ்துமஸ் கிஃப்ட்டாக காஜல் அகர்வால் கொடுத்த லிப் லாக் கிஸ், அவரது ரசிகர்களை சூடாக்கியுள்ளது.
மேலும் பலர் காஜலுக்கும் அவரது கணவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடும்பத்துடன் க்யூட்டாக கிறிஸ்மஸ் கொண்டாடிய காஜல் அகர்வாலின் இன்ஸ்டோ போட்டோஸ் தொடர்ந்து வைரலாகி வருகிறதைக் காணலாம்.
Listen News!