• Sep 20 2024

இந்த ஆண்டு குழந்தை பெற்றுக் கொண்ட பிரபலங்களின் லிஸ்ட்- ரசிகர்களிடம் இருந்து குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

2022ம் ஆண்டு முடியவுள்ள நிலையில் இந்த ஆண்டின் சிறந்த படங்கள், வசூலை வாரிக்குவித்த படங்கள், டாப் நடிகர், நடிகைகள், திரைப்பிரபலங்களின் திருமணங்கள், விவாகரத்துகள் என அனைத்தையும் நாம்பார்த்து வருகிறோம். அந்த வகையில், இந்த ஆண்டு அம்மாவான நடிகைகள் குறித்து பார்ப்போம்.


நடிகை காஜல் அகர்வால் கடந்த 2020ம் ஆண்டு தொழிலதிபர் கௌதம் கிச்சிலு என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இந்த ஆண்டு ஏப்பரல் மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நீல் என பெயர்வைத்துள்ளனர். 


இவர்களைத் தொடர்ந்து இந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட நயன்தாரா மற்றும் விக்னேஷ் தம்பதியினர் அண்மையில் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றனர்.  


மேலும் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த நடிகை நமிதா, 2017 ஆம் ஆண்டு காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு பின்  கடந்த ஆகஸ்ட் மாதம் இரட்டை ஆண் குழந்தைக்கு தாயான நமிதா தனது குழந்தைகளுக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என பெயர்கள் வைத்துள்ளார்.


நடிகை பிரணிதா உதயம், சகுனி , மாஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தொழிலதிபர் நிதின் ராஜுவை கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர், கணவரின் பிறந்தநாளில் கர்ப்பமாக இருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்தார். அதையடுத்து, ஜூன் மாதம் இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற பிறகும் தாறுமாறான போட்டோக்களை பதிவு செய்து வருகிறார்.


பாலிவுட் நடிகர்களான ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.  இதையடுத்து நவம்பர் மாதம் இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியான தகவல் ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''எங்கள் வாழ்க்கையின் அற்புதமான செய்தி இது. ஒரு மேஜிக்கல் பெண் குழந்தை அவள்" என பதிவிட்டிருந்தார்.


Advertisement

Advertisement