• Sep 20 2024

தனுஷால் வாழ்ந்தேன்.. ஜெயம் ரவியால் அழிந்தேன்.. இயக்குநர் கண்ணீர் பேச்சு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 தனுஷால் வாழ்ந்தேன், ஜெயம் ரவியால் அழிந்தேன் என்று பிரபல இயக்குநர் ஒருவர் தனது மன வேதனையை கூறியுள்ளார்.இயக்குநர் மணிவண்ணனின் சீடரான சுராஜ், அட்டகாசமான நகைச்சுவை திரைப்படங்களை இயக்கி உள்ளார்.சுராஜ் இயக்குநராவதற்கு முன் சுந்தர் சி இயக்கிய பல படங்களில் பணியாற்றி உள்ளார்.

மூவேந்தர், குங்குமப் பொட்டு கவுண்டர், மிலிட்டரி என மணிவண்ணன், சத்யராஜை வைத்து படங்களை இயக்கி வந்த சுராஜ், தனுஷை வைத்து படிக்காதவன், மாப்பிள்ளை போன்ற படங்களை இயக்கி தனது மார்கெட்டை உயர்த்திக்கொண்டார். சுராஜ் சொன்ன கதை தனது கதாபாத்திரத்திற்கு பொருந்தி இருந்ததால், அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் தனுஷ்.அத்தோடு இப் படமும் வசூலை அள்ளியது.

இதையடுத்து, மூன்றாவதாக தனுஷுக்கு ஒரு கதையை சுராஜ் சொன்ன போது, பிஸியாக இருந்த தனுஷ், இப்போது முடியாது கொஞ்சம் நாள் காத்திருங்கள் என கூறியதால், இயக்குநர் சுராஜ், சகலகலா வல்லவன் என்ற படத்தை இயக்கினார். எனினும் இந்த படம் படு தோல்வி அடைந்ததால், மிகுந்த வேதனை அடைந்தார் சுராஜ்.



அத்தோடு சகலகலா வல்லவன் படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, சூரி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் நகைச்சுவை காட்சிகள் ரசிக்கும் படி இருந்த போதும் படம் வெற்றிப்பெறவில்லை. சகலாகலா வல்லவன் மோசமான தோல்வி அடைந்ததால், டென்ஷனான சுராஜ் நான் காத்திருந்து தனுஷை வைத்தே படம் எடுத்து இருக்கலாம், ஜெயம் ரவியை வைத்து படம் எடுத்து பெரிய தவறை செய்துவிட்டேன் என பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியிருந்தார்.

அண்மையில் வடிவேலுவை வைத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தை இயக்கி இருந்தார். அத்தோடு இத்திரைப்படம் வடிவேலுவுக்கு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் படத்தின் கதை படுமொக்கையாக இருந்ததால், இத்திரைப்படம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தது. லைகா நிறுவனம் தயாரித்திருந்த படம் வெளியான முதல் நாளே எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

Advertisement

Advertisement