உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
விஜய் சேதுபதி ,பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.
வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ள இந்தத் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.இந்த படத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.
நான்காண்டுகளுக்குப் பிறகு கமலின் திரைப்படம் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதையடுத்து பல இடங்களுக்கு கமல் மற்றும் லோகேஷ் ஆகிய இருவரும் ப்ரமோஷன் பணிகளுக்காக செல்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டியளித்து வரும் லோகேஷ் கமலின் அடுத்த திரைப்பட இயக்குனர் குறித்து பேசியுள்ளார்.
அதில் கமலின் அடுத்து பணியாற்றவுள்ள மகேஷ் நாராயணனிடம் விக்ரம் படத்தை பார்த்துவிட்டு கமல் "அடிப்பொலி" என கூறினாராம். மேலும் லோகேஷ் மகேஷ் நாராயணன் தான் கமலின் அடுத்த படத்தை இயக்க போவதாகவும் கூறியுள்ளார்.
Listen News!