தமிழ் சினிமா திரைப்பட பத்திரிகையாளர்கள் சார்பில் திரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குநர் பாரதிராஜாவிற்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்விற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கௌரவிக்கப்பட்ட பின்னர் இவ்விழாவில் பேசிய பாரதிராஜா, "டெல்லி முதல் பல மேடையைப் பார்த்து உள்ளேன். ஆனால் இன்று பத்திரிகையாளர்கள் எனக்கு நடத்தும் இந்த நிகழ்வு மிகவும் நெருக்கமான ஒன்று. அந்தக் காலத்தில் என்னை தவறாக விமர்சித்து ஒரு ஊடகம் எழுதியுள்ளது. அதன் பின்பு நேரில் சென்று அதன் ஆசிரியரை திட்டிவிட்டேன். நான் தற்போது 4 தலைமுறை ஊடகத்தை பார்க்கிறேன்,
இந்தத் தலைமுறை ஊடக சூழல் மிகவும் நட்பாக மாறி உள்ளது. மேலும் இயக்குநர் லோகேஷ் சின்ன பையன், ஆனால் சாதனையில் பெரிய பையன். நான்கே படத்தில் நான்கு திசையையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டான். நான் 40 படத்துல பண்ணாததை லோகேஷ் நாளே படத்துல பண்ணிக் காட்டிட்டான்.
அவன் மூஞ்ச நான் பார்த்ததில்லை. ஒரே தடவைதான் போன் பண்ணி பேசி இருக்கேன், அதுவும் விக்ரம் படத்தை பார்த்த பிறகுதான். கமல் ஒரு அற்புதமான கலைஞன், சினிமாவில் நிறைய இழந்திருக்கிறான். ஆனால் அது அனைத்தையும் லோகேஷ் கமலுக்கு ஒரே படத்தில் சம்பாதிச்சு கொடுத்துட்டான். அவனிடம் மிகப்பெரிய கலை ஞானம் உள்ளது” என்று பெருமையாகப் பேசி பாராட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- இப்போ ரொம்ப சந்தோஷமாக இருக்கு இவரை ஒரு முறை தான் பார்த்திருக்கின்றேன்- கலாய்த்த லோகேஷ் கனகராஜ்
- கூலர்ஸ், சிகரெட், காதில் கடுக்கன் என வித்தியாசமான கெட்டப்பில் அல்லு அர்ஜுன் -ஆச்சரியத்தில் ராஷ்மிகா மந்தனா
- லட்சத்தில் ஒருவருக்கு தான் இந்த இன்பெக்ஷன் ஏற்படும் அது தான் மீனா கணவருக்கும் வந்து விட்டது- கலா மாஸ்டர் கூறிய உண்மைத் தகவல்
- பாரதி கண்ணம்மா ஃபரினாவா இது?- குட்டை ஆடையில் நஸ்ரியாவுக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஆட்டம் போடுகின்றாரே
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!