நடிகர் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் தளபதி 67.இப்படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகின்றார்.இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளுக்காக படக்குழு காஷ்மீர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இப்படி நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி 67 படக்குழு அனைவரும் காஷ்மீர் சென்றனர். இவர்கள் காஷ்மீர் செல்கையில் படக்குழுவின் பல புகைப்படங்களும், வீடியோக்களும் சோசியல் மீடியாவில் படு பயங்கரமாக வைரலாகியது. அத்தோடு பலரும் படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து ரசிகர்கள் ஒவ்வொரு கதைகளை கூறி வந்தனர்.
இப்படிப்பட்ட நிலையில் தான் படத்தில் முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியது. அந்த ப்ரோமோவில் காலை காட்சியில் சாக்லேட் தயாரிக்கும் விஜய் இரவு நேரத்தில் வாழ் ஒன்றை தயாரிக்கிறார். பின்னர் அங்கு பல கார்கள் வருகின்றனர். விஜய் வாழில் உள்ள சாக்கலேட்டை சாப்பிடும் படி, Bloody Sweet என சொன்னபடி அந்த ப்ரோமோ முடிந்தது. மேலும், இந்த படத்திற்கு ‘ leo ‘ என்று தலைப்பு வைத்துள்ளனர். படம் வரும் ஆக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இப்படி பட்ட நிலையில் தான் விக்ரம் படத்தின் திரைக்கதை என்று சொல்லப்படும் ஒரு புத்தகம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த புத்தகத்தில் ஒரு பக்கத்தில் செம்பன் வினோத் நடித்த ஜேம்ஸ் என்ற கதாபாத்திரத்தின் வாசன் அதில் எழுதப்பட்டுள்ளது. அந்த வசனத்தில் “காக்ஷ்மீருக்கு ஒரு கேஸ் விஷயமாக சென்றிருந்தோம். அவன் எனக்கு பழக்கமானவன். அவன் பெயர் அமர் என்று சொன்னார்கள் ஆனால் அது அவனுடைய உண்மையான பெயர் இல்லை” என்று கூறும் வசனம் இடம்பெற்றுள்ளது.
இப்படி இருக்கும் போது விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பிற்காக தளபதி 67 படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர். மேலும் விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டீனாவாக நடித்த வசந்தி மற்றும் கைதி இடத்தில் நெப்போலியன் என்ற போலீஸ் காவலராக நடித்திருப்பார் அவரும் தளபதி 67 படத்தின் பூஜையின் போது கலந்து கொண்டிருந்தார்.
இப்படி பல விஷயங்கள் விக்ரம் படத்திற்கும் லியோ படத்திற்கும் ஒன்றுவதினால் ஒருவேளை லியோ படம் LCU லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்சில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Listen News!