• Sep 20 2024

விக்ரம் 3'க்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குநர்- புதிய அப்டே்ட கொடுத்த கமல்ஹாசன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இப்படமானது ஜுன் 3ம் திகதி வெளியாகவுள்ளதால் இப்படத்தின் ப்ரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகர் கமல் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

அதில் கமல் கூறியதாவது: படத்தில் கூட இவ்வளவு வேலை பார்க்கவில்லை. இப்போது சுழன்று சுழன்று வேலை பார்க்கிறேன். 4 வருடம் என் ரசிகர்களை காக்க வைத்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். லோகேஷ் கனகராஜுக்கு நன்றி கூறினால் அவர் அன்னியப்பட்டுவிடுவார். நல்ல படம் எடுத்துள்ளோம். அது வெற்றி பெறும் என நம்புகிறோம். ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது. என்னிடம் பெரிய அளவில் பணம் இல்லை. என்னுடைய வருமானத்தை மக்களுக்காக பயன்படுத்துவேன்.

கருணாநிதி பிறந்தநாளில் படம் வெளியாவது எதிர்பாராமல் நடந்தது. என் திறமையை வளர்த்து கொள்ள முன்னோடியாக இருந்ததில் கருணாநிதியும் ஒருவர். 'விக்ரம் 3'க்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குநர் என்பதை நான் முடிவு செய்து விட்டேன். 'இந்தியன் 2' எனது அடுத்த படங்களில் நிச்சயம் இடம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

லோகேஷ் கனகராஜ் பேசுகையில், நடிகர் கமலுக்கு என் முதல் நன்றி. அவரை பார்த்து தான் சினிமா கற்றுக் கொண்டேன். விக்ரம் படத்தில் திருப்திகரமான விஷயம் ஒன்று நடந்துள்ளது. படத்தை பார்த்தால் உங்களுக்கு அது புரியும் என பேசினார். இதனால் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement