• Nov 14 2024

லியோ பட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ்!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தின் ரிலீசுக்காக கோலிவுட் சினிமாவே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது. படம் துவங்கும் போது இருந்த எதிர்பார்ப்பை விட தற்போது ரிலீஸ் தேதி நெருங்க  ரசிகர்கள் இடையில்  எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இன்று டிரெய்லர்  வெளியாக இருப்பதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்தபடி இருக்கின்றார்கள் .


லியோ' படம் அதிரடியாக தயார் ஆகியுள்ள நிலையில் படப்பிடிப்பு சமயத்தில் விஜய், லோகேஷ் கனகராஜ் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும், இதனால் படத்தின் பெரும்பாலான காட்சிகளை இயக்குனர் ரத்னகுமார் இயக்கியுள்ளதாக இணையத்தில் வதந்திகள் பரப்பப்பட்டது. இதனால் லோகேஷ் கனகராஜ் தனது x தள  பயோவில் இருந்து 'லியோ' பட பெயரை நீக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.


இந்நிலையில் படம் வெளியிடப்படும் தேதி நெருங்கி வரும் நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது x தள பயோவில் லியோ படத்தின் பெயரை சேர்த்துள்ளார். இதன் மூலமாக அனைத்து விதமான வதந்திகளுக்கும்  முற்றுப்புள்ளி வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement