• Sep 20 2024

'நீங்க யாரோட பயோபிக்கை படமாக எடுப்பீங்க'-யோசிக்காமல் பதில் கூறிய லோகேஷ் கனகராஜ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய மார்கெட்டை தாண்டி சர்வதேச சந்தைகளில் மிகப்பெரிய லாபத்தை பெற்று வரும் திரைப்படம் தான் விக்ரம். இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்ததோடு வெளியாகி 4 வாரங்கள் கடந்தும் 400 கோடி வசூல் சேய்து சாதனை படைத்து வருகின்றது.

இப்படத்தை பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் அனைவரும் செம குஷியில் உள்ளனர். மேலும் கமலின் தீவிர ரசிகனான லோகேஷ் இப்படத்தின் மூலம் கமலின் மார்க்கெட்டை உயரச் செய்துள்ளார்.

இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் பல்வேறு சேனல்களில் பேட்டி அளித்து வருகின்றார். அப்போது நீங்க ஒரு பயோபிக் எடுத்தா யாரோட பயோபிக் எடுப்பீங்கன்னு கேட்ட கேள்விக்கு, கொஞ்சமும் யோசிக்காமல் கமலோட பயோபிக் தான் எடுப்பேன் என கூறியுள்ளது கமல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும், அந்த ஐடியா இந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் வந்தது. அவர் சினிமாவில் பட்ட கஷ்டம், உழைப்புன்னு ஒரு பெரிய படத்திற்கான நிறைய விஷயங்கள் அவரது வாழ்க்கையில் இருக்கு என்றும் கூறி கூஸ்பம்ப்ஸ் வர வைத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜின் இந்த பிரம்மாண்ட பயோபிக் பிளான் எல்லாம் சிறப்பா இருக்கு.. ஆனால், கமல் அளவுக்கு அவர் பயோபிக்கில் நடிக்க ஆள் வேண்டுமே அப்படியொருவர் கிடைப்பது ரொம்பவே அரிது, அவரே ஆட்டோ பயோகிராஃபின்னு நடிச்சாத்தான் உண்டு என கமலின் வெறித்தனமான ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement