சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தலைவர் 171’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் தற்போது இணையத்தில் கசிந்து வருகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் ரஜினிக்கு ஒரு கதை கூறியதாக அந்த கதையின் ஒன்லைனை தெரிவித்துள்ளார். அந்த கதையின்படி ஒரு வயதான நபர் தனது பேரனை பாதுகாத்து கொள்வதற்காக ரீசார்ஜ் கடை ஒன்று வைத்துள்ளார், அந்த கடையை ஒரு மிகப்பெரிய நெட்வொர்க் அவருக்கே தெரியாமல் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள், ஒரு கட்டத்தில் இது அந்த வயதான நபருக்கு தெரிந்தவுடன் அவர் எடுக்கும் அதிரடி முடிவுதான் படத்தின் கதை என்று கூறியுள்ளார்.
இதிலிருந்து ரஜினிகாந்த் தான் ரீசார்ஜ் கடை வைத்திருப்பவராக நடித்திருப்பார் என தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் பேரனை காப்பது தான் இந்த படத்தின் கதை என்று வரும்போது இது ’ஜெயிலர்’ படத்தின் சாயலாக இருக்குமோ என்றும் நினைக்க தோன்றுகிறது. ஏற்கனவே நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் ’ஜெயிலர்’ படத்தின் கதையை பற்றி பேசும்போது பேசிய போது இதே போன்று கதை என்னிடம் இருக்கிறது என்று லோகேஷ் கனகராஜ் கூறியதாக தகவல் வெளியானது.
ஒரே சாயலில் உள்ள கதையாக இருந்தாலும் நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவருமே வித்தியாசமான திரைக்கதை மற்றும் மேக்கிங் இருக்கும் என்பதால் ‘தலைவர் 171’ திரைப்படம் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!