• Nov 14 2024

காதலியை ரகசியமாக பதிவு திருமணம் செய்த லோகேஷ் கனகராஜ்? கசிந்த வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதனைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். ஹீரோயினே இல்லாமல் செம ஹிட்டடித்தது இந்தப் படம்.

மேலும் இந்தப் படங்களை பார்த்த நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜுக்கு வாய்ப்பு வழங்கினார். இருவரின் கூட்டணியிலும் மாஸ்டர் திரைப்படம் உருவானது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலையும் அள்ளிக்குவித்தது.

அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், கடைசியாக கமலின் விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது நீண்ட நாள் காதலியை ரகசிய திருமணம் செய்ததாக தகவல் கசிந்துள்ளது.

சென்னை மதுரவாயல் ரிஜிஸ்டர் ஆபிஸில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இளம் பெண் ஒருவர் மற்றும் சில இளைஞர்களுடன் இருக்கும் வீடியோ வைரலாகி வருகின்றது. எனினும் இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்ததாக பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் அவர் வேறு ஏதாவது சொத்துக்காக பத்திரப்பதிவுக்கு சென்றாரா? அல்லது ஷூட்டிங்கிற்கு பர்மிஷன் வாங்க சென்றாரா என்பது பற்றி தெரியவில்லை. உண்மையிலேயே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரகசியமாக பதிவு திருமணம்தான் செய்தாரா என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement