• Sep 20 2024

நடிகராக களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்- அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா?- அடடே சூப்பர் அப்டேட்டாக இருக்கே..

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் மாநகரம் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் லோகேஷ் கனகராஜ்.இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்னும் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.இப்படம் லோகேஷை முக்கிய இயக்குநராக உயர்த்தியது.

இதன் பின்னர் இவர் இயக்கிய மாஸ்டர் விக்ரம் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்த வகையில் லோகேஷ் தற்பொழுது நடிகர் விஜய் நடித்து வரும் லியோ என்னும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.


மீண்டும் தளபதி விஜய்யுடன் கூட்டணி வைத்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பானது அதிகமாக உள்ளது.அத்தோடு லியோ படத்திலிருந்து அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.


இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி நடித்து வரும் சிங்கப்பூர் சலூன் படத்தில் லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளாராம்.மேலும் நடிகர் ஜீவாவும் லோகேஷ் கனராஜுடன் இணைந்து கேமியோவாக நடிக்கிறாராம். ஏற்கனவே மாஸ்டர் படத்தில் இறுதி காட்சியில் ஒரு சிலமிடங்கள் மட்டுமே லோகேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement