தமிழ் சினிமாவில் மாநகரம் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி என்னும் திரைப்படத்தையும் விஜய்யை வைத்து மாஸ்டர் என்னும் திரைப்படத்தையும் இயக்கியிருந்தார்.
இப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.இப்படம் வேற லெவலில் வெற்றியும் பெற்றது. இதனைத அடுத்து மீண்டும் விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.
இந்த நிலையில் இயக்குநர் கோகுல், RJ பாலாஜியை கதாநாயகனாக வைத்து ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சத்தமே இல்லாமல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் முதல் லுக்கை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக நடத்தினர்.
அதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டு ஆர் ஜே பாலாஜியுடன் பங்கேற்றார். அப்போது அவர் இந்திய கிரிக்கெட் பற்றிய தன்னுடைய மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் லோகேஷ் ஒரு கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
Listen News!