• Sep 20 2024

லோகேஷ் கனகராஜின் அசுர வளர்ச்சி.. கடுங்கோபத்தில் குமுறும் மற்ற இயக்குநர்கள்?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய அளவில் இப்போது பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரத்தில் தொடங்கி விக்ரம்வரை அவர் இயக்கிய அனைத்து படங்களுமே ஹிட்டானதால் அவருக்கான டிமாண்ட் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக விக்ரம் படத்தின் மெகா ப்ளாக் பஸ்டர் அவரை உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது. இதன் காரணமாக பிற மொழி நடிகர்களும் லோகேஷின் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆனால் ரொம்பவே பிஸியாக இருக்கிறார்.

விஜய்யை வைத்து இப்போது லியோ படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் இருக்கிறது. அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. ஷூட்டிங் இன்னும் முடியாதபோது படத்தின் பிஸ்னெஸ் இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் அதிகம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர இன்னமும் கேரளாவின் தியேட்டர் உரிமை உள்ளிட்ட சில பிஸ்னெஸ் இன்னும் தொடங்காததால் ரிலீஸுக்கு முன்னதாகவே 500 கோடி ரூபாயை படம் சம்பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இரண்டு படங்களை இயக்கவிருக்கிறார். அதில் ஒன்று கைதி படத்தின் இரண்டாம் பாகம். படத்தின் முதல் பாகம் மெகா ஹிட்டாகியுள்ளதால் அதன் இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இன்னமும் குறையாமல் இருக்கிறது. கார்த்தியும் அந்தப் படத்தில் நடிக்க ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார். இருப்பினும் கைதி 2வை ஆரம்பிப்பதற்கு முன்னதாக லோகேஷ் வேறு ப்ளானில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில் ரஜினியின் 171ஆவது படத்தை இயக்குவதற்கு லோகேஷ் கனகராஜ் கமிட்டாகியிருக்கிறார். அதுதான் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் எனவும் தகவல் ஒன்று உலாவுகிறது. எனவே ரஜினியுடனான படத்தை முடித்துவிட்டு கைதி 2வை அவர் இயக்கலாம் என தெரிகிறது. அதனைத் தொடர்ந்து இரும்புக்கை மாயாவி உள்ளிட்ட படத்தையும் அவர் இயக்குவார் என பேசப்படுகிறது.

திறமை வாய்ந்த இயக்குநர்,மேக்கிங்கில் அதகளம் செய்கிறார் என பரவலாக லோகேஷுக்கு பாராட்டு குவிந்தாலும் அவர் இரவில் காட்சிகள், போதை பொருள்கள் என ஒரே டெம்ப்ளேட்டை வைத்தே படம் இயக்குகிறார். முக்கியமாக மாநகரம், கைதி ஆகிய படங்களுக்கு பிறகு அவர் இயக்கும் படங்களில் ஸ்க்ரீன்ப்ளே அவ்வளவாக ஈர்ப்புடன் இல்லை என்ற விமர்சனத்தையும் ஒரு தரப்பினர் முன்வைத்துவருகின்றனர்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் கொண்டாடப்படுவதை பார்த்து சில இயக்குநர்கள் கடும் கோபத்தில் முனங்கி வருவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. அதாவது லோகேஷின் படங்களில் ஸ்க்ரீன் ப்ளே ஒன்றுமே இல்லை. எல்சியூ என்பதை வைத்துக்கொண்டு ரொம்பவே சேஃப் சோனில் இருந்தபடி அவர் படங்களை உருவாக்குகிறார்.

புதிய முயற்சி எதையுமே செய்ய மறுக்கிறார். ஜானரையும் மாற்ற மாட்டேன் என அடம்பிடிக்கிறார் என்று சினிமாவில் இருக்கும் சீனியர் மற்றும் புகழ் குறைந்த இயக்குநர்கள் தனது நெருங்கிய வட்டாரத்திடம் குமுறிவருவதாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement