நாளைய தினம் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ள திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதோடு கமல்ஹாசன் நடித்துள்ளார். இவருடன் விஜய் சேதுபதி பகத் பாசில் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளனர்.
அதிகாலை காட்சிகள் தொடங்க இன்னும் சில மணி நேரங்களே இருக்கிறது என்கிற நிலையில் தற்போது லோகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் தான் கமல் ரசிகராகவே இருந்து தற்போது அவரது படத்தை இயக்கி இருப்பது கனவு போலவே இருக்கிறது என கூறி இருக்கிறார். மேலும் 18 மாதம் வியர்வை சிந்தி உழைத்து இந்த படத்தை எடுத்திருப்பதாகும் தெரிவித்துள்ளார்.
மேலும் ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்து இருக்கிறார் அவர். கைதி படத்தை மறுபார்வை பார்த்துவிட்டு விக்ரம் படம் பார்க்க வாருங்கள் என குறிப்பிட்டு இருக்கிறார் அவர்.
அதனால் விக்ரம் கைதி படத்தின் தொடர்ச்சி தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!