தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தில் டிஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதே டெக்னாலஜியை ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 171’ திரைப்படத்தில் பயன்படுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தலைவர் 171’. இந்த படத்தின் திரைக்கதை எழுதும் பணியை தற்போது லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு இருக்கும் நிலையில் இந்த படத்தின் சில காட்சிகளில் ரஜினிகாந்த் இளமையாக தோன்றும் காட்சிகள் இருப்பதாக தெரிகிறது.
இதனை அடுத்து ’கோட்’ திரைப்படத்தில் விஜய்யை இளமையாக காண்பிக்க டிஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்ட நிலையில் அதே டெக்னாலஜியை ரஜினிக்கும் பயன்படுத்த லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாகவும் இதனை அடுத்து ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் விரைவில் இதற்காக அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே ’தலைவர் 171’ திரைப்படத்தில் ரஜினிகாந்தை இளமையாக பார்க்க அவரது ரசிகர்களுக்கு வாய்ப்பு உள்ளது என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ‘பேட்ட’ திரைப்படத்தில் ரஜினியை சில காட்சிகள் இளமையாக கார்த்திக் சுப்புராஜ் காண்பித்த நிலையில் தற்போது டிஏஜிங் டெக்னாலஜியில் 30 வருடத்திற்கு முந்தைய ரஜினியை பார்ப்பது போல் நேச்சுரலாக காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாகவும் இந்த ஆண்டிற்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
Listen News!