• Sep 20 2024

கைதி 2 ரிலீஸ் தேதியையும் முடிவு செய்த லோகேஷ்- ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸாக உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. தளபதி விஜய்யஜன் 67 படமாகிய இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கின்றார். இவருடன் இணைந்து  திரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன் போன்ற இன்னும் பெரிய நட்சத்திரப் பட்டாளமும் இப்படத்தில் நடித்து வருகின்றது.

இப்படத்தின் படப்பிடிப்பானது இப்போது காஷ்மீரில் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் லியோ படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக இப்படத்தின் டைட்டில் வீடியோவில் லோகேஷ் அறிவித்திருந்தார்.இப்போது லியோ படத்தை மட்டும் இன்றி கைதி 2 படத்தின் ரிலீஸ் தேதியையும் லோகேஷ் முடிவு செய்து வைத்துள்ளாராம்.


 அதாவது கார்த்திக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய கைதி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளது. இவரது டில்லி கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்கப்பட்டது.லியோ படத்தின் ரிலீஸுக்கு பிறகு கைதி 2 பட வேலையை லோகேஷ் ஆரம்பிக்க உள்ளார்.

 அதன்படி இந்த ஆண்டு 2023 இறுதியில் படப்பிடிப்பு தொடங்கி 2024 இறுதியில் கைதி 2 படத்தை ரிலீஸ் செய்ய லோகேஷ் திட்டமிட்டுள்ளாராம். மேலும் கைதி 2 படம் லோகேஷ் எல்சியுவில் இணையும் என்று கூறப்படுகிறது.ஏனென்றால் ஏற்கனவே விக்ரம் படத்தில் டில்லி கதாபாத்திரத்தின் குரல் மட்டும் பயன்படுத்தி இருந்தார்கள். 


ஆகையால் கைதி 2 படத்தில் டில்லிக்கு போட்டியாக சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கைதி 2 கார்த்தியின் கேரியரில் உச்சத்தை தொடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement