விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் உருவாகி வருவது நமக்கு தெரிந்த ஒன்றே. லியோ திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், காஷ்மீரில் லியோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அத்தோடு கடந்த வாரம் லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக்கானதால், படப்பிடிப்பு தளத்தில் யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என உத்தரவு போடப்பட்டுள்ளது.
இருந்தாலும், நடிகர் ,நடிகைகள் ஜாலியாக டூர் போனது போல பனிப்பொழிவுக்கு இடையே இருந்து புகைப்படங்களை எடுத்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிரப்பி வருகின்றனர். காஷ்மீரில் இருந்து நடிகை திரிஷா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி பல லைக்குகளை பெற்றது.
இவ்வாறுஇருக்கையில் சமீபத்தில் தான் மிஷ்கின் அவரின் காட்சியை நடித்து முடித்துவிட்டு சென்னை திரும்பினார். மேலும் அவர் ட்விட்டர் பக்கத்தில், " லோகேஷ் கனகராஜ் தேர்ச்சி பெற்ற இயக்குனராகவும், அன்பாகவும் களத்தில் ஒரு வீரனை போல இருந்தார்" என்று கூறினார்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், "உங்களுடன் சேர்ந்து பணியாற்றியதை என்னால் விவரிக்க முடியவில்லை.
இந்த சந்தோஷத்தை வெளிப்படுத்த எத்தனை நன்றிகள் கூறினாலும் பத்தாது. உங்களுக்கு மில்லியன் நன்றி" என்று ட்விட்டர் பக்கத்தில் மிஷ்கினுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
My Dear @DirectorMysskin sir,
A million thanks won’t suffice to express how grateful and fortunate I feel to have had the opportunity to work with you in such close capacity. We had an absolute blast having you on sets Sir.I can never thank you enough but a million thanks ! #Leo pic.twitter.com/0UGHOlsegW
Listen News!