• Sep 20 2024

டுவிஸ்ட் வைத்த லோகேஷ்; சமந்தா வில்லி ஆனதால் விஜய்க்கு ஜோடி இவர் தானாம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவல் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இணையப்போகின்றார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய், 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக வலம் வருவதோடு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவர். இவர் நடிக்கும் படங்கள் வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றன. இதனால் நடிகர் விஜய்யின் சம்பளமும் படத்துக்கு படம் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது இவர் நடித்து வரும் வாரிசு படத்திற்காக ரூ.120 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் பொதுவாக நடிகர் விஜய் ஒரு படத்தில் நடித்து முடித்த பின்னர் தான் அடுத்த படத்தில் கமிட் ஆவார். ஆனால் தற்போது முதன்முறையாக இவர் வாரிசு படத்தில் நடிக்கும் முன்னரே தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டார்.

அத்தோடு லோகேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விக்ரம் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதால் தளபதி 67 படத்தின் மீதான் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது.

அவர் தற்போது நடித்து வரும் வாரிசு படத்தை விட இப்படத்திற்கு தான் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.எனினும் இதனை உறுதி செய்யும் விதமாக இப்படம் குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. மேலும் அந்த வகையில் இப்படத்தில் நடிகை சமந்தா, விஜய்க்கு வில்லியாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

இந்நிலையில், தற்போது விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி டாக்டர், டான் போன்ற படங்களில் நடித்து பேமஸான நடிகை பிரியங்கா மோகன் தான் தளபதி 67-ல் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement