தமிழ் பிக் பாஸை போல ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியி,ல் பிரபலாமானவர் உர்பி ஜாவேத். மேலும் இவர் பேஷன் என்ற பெயரில் வித்தியாசமான உடை அணிவதில் பிரபலமானவர் என்று கூறலாம். சாதாரணமாக கற்கள், உடைந்த கண்ணாடி, கயிறு, செய்தி தாள், பூ இதழ்கள், குப்பை காகிதம் போன்றவற்றின் மூலம் தன்னுடைய உடையை மறைத்துக்கொண்டு புகைப்படங்களை எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்
இந்த நிலையில் இவர் ஆபாசமாக உடை அணிகிறார் என்று கடுமையான விமர்சங்கள் சோசியல் மீடியாக்களில் வந்தாலும் தொடர்ந்து தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் படு ஆபாசமாக உடையணிந்து புகைப்படத்தை இன்னமும் பதிவிட்டுதான் வருகிறார். இந்த நிலையில் உர்பி ஆபாசமாக உடையணிந்து மும்பை தெருக்களில் நடக்கிறார் என்று பாஜக மகிளா மோர்ச்சா தலைவர் சித்ரா வாக் குற்றம் சாட்டியிருந்தார். இவரை கைது செய்ய ஏதாவது வழி இருந்தால் கைது செய்யுங்கள் என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இவ்வாறுஇருக்கையில் தான் கடந்த டிசம்பர் மாதம் உர்பி ஜாவேத்தை போலீசார் கைது செய்த்தனர். அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன்னுடய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துபாயில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அவர் பதிவிட்டிருந்தது வழக்கமான ஆபாச புகைப்படம் என்றாலும் அதனை ஆண்களுடன் கவர்ச்சிகரமாக நடமாட தடை விதித்துள்ள இடத்தில புகைப்படம் எடுத்துதான் சர்ச்சையாகியது. இதனை அடுத்து போலீசுக்கு புக்கார் அளிக்கப்பட்டதால் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
எந்த ஆபாசம் இவரை பிரபலத்தின் உச்சிக்கு கொண்டு சென்றதோ அந்த ஆபாசம் இவரை ஜெயிலில் தள்ளியது என்று தான் கூற வேண்டும். இதனையடுத்து வெளியில் வந்த உர்பி ஜாவேத் இது குறித்து பேசிய போது தன்னுடைய உடைக்காக கைது செய்யப்படவில்லை என்றும், தடை விதிக்கப்பட்ட இடத்தில் வீடியோ எடுத்தினால் தான் கைது செய்தனர் என்று கூறியிருந்தார். மேலும் இந்த நிலையில் சமீபத்தில் தான் ஏன் உடை அணிவதில்லை என்று விளக்கம் கொடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு ஒன்றிய பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோ பதிவில் தனக்கு மிகவும் மோசமான ஒரு பிரச்னை வந்துள்ளதாகவும், அதனால்தான் நான் உடைகளை அணிவதில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய தொடைகளிலும் கைகளிலும் அலர்ஜி வந்துள்ளதாகவும், இந்த பிரச்னை மிகவும் கொடுமையாக இருக்கிறது என்றும், இதற்கும் நான் பருத்தி ஆடை தான் அணிந்திருந்தேன் அதனால் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது என்றும் அந்த வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
எனினும் சமீபத்தில், மகாராஷ்டிர மகிளா மோர்ச்சா தலைவி சித்ரா கிஷோர் வாக் நடிகை உர்பியை குற்றம் சாட்டியதை தொடர்ந்து அதற்குப் பதிலளித்த உர்பி அரசியல்வாதிகள் தங்கள் சொத்துக்கள் குறித்து வெளியிடத் தயாராக இருந்தால், விசாரணையின்றி தானும் சிறைக்குச் செல்லத் தயார் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
#UrfiJaved pic.twitter.com/ziT4rI4LXg
Listen News!