• Sep 20 2024

ரூ.2 இலட்சத்துக்கு என்ன வாங்கியிருக்கார் பாருங்க நம்ம 'பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா... அப்படி அதில என்ன தான் விசேஷமாக இருக்கு...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் அண்ணன்-தம்பிகளின் கதையை மையமாக கொண்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடரே 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. இத்தொடரில் முதல் 550 எபிசோடுகளை சிவசேகர் அவர்கள் இயக்க 551 எபிசோடில் இருந்து டேவிட் சார்லி என்பவர் இயக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


மேலும் இத்தொடரில் இப்போது தான் விறுவிறுப்பான திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளார்கள். இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இந்த தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் ஆரம்பம் முதல் நடித்து வருபவர் ஹேமா. 



இவர் தனது 22 ஆவது வயதில் திரை வாழ்க்கையை தொடங்கினர். அதாவது பெப்பர்ஸ் என்ற டீயிவில் தொகுப்பாளினியாக பணிசெய்தார் . பின்னர் 2015-ஆம் ஆண்டு விஷால் மற்றும் காஜல் அகர்வால் நடித்த 'பாயும் புலி' என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஹேமா ராஜ்குமார் அறிமுகமானார். அத்தோடு “ஆறாது சினம்” என்ற தமிழ் படத்தில் சிறந்த நடிகர்களான அருள்நிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஐஸ்வர்யா போன்ற பிரபலங்களுடன் விமலா என்ற வேடத்தில் ஹேமா ராஜ்குமார் நடித்தார்.


அதுமட்டுமல்லாது 'சவரகதி,வீரனை மற்றும் இவன் யார் என்று தெரிகிறதா' என்ற பிரபலமான படங்களிலும் இவர் நடித்திருக்கின்றார். ஹேமா நடிப்பில் மட்டும் கவனத்தை செலுத்தாது சொந்தமாக ஒரு யூடியூப் பக்கம் திறந்து அதில் நிறைய விஷயங்களை பதிவு செய்து வருகிறார்.



அந்தவகையில் சமீபத்தில் அவர் ஒரு Fridge ஒன்றினை வாங்கியிருக்கின்றார். அது குறித்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ரூ. 2 லட்சத்திற்கு மதிப்புள்ள அந்த Fridge இல் என்னென்ன விஷயங்கள் உள்ளது, ஸ்பெஷலாக என்ன இருக்கிறது என்ற விஷயங்களை கூறியிருக்கிறார்.


அதாவது அதன் டோரை இரண்டாக ஓபன் பண்ணலாம் எனக் கூறியிருக்கின்றார். அதுமட்டுமல்லாது அந்த Fridge ஐ தட்டும் போது அதன் உள்ளே லைட் எரியக் கூடிய வகையில் வசதிகளும் அமைந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாது அந்த Fridge இல் இன்னும் பல நிறைய வசதிகள் இருக்கின்றன. இதனை அவர் அந்த வீடியோவில் அழகாக கூறியிருக்கின்றார்.

Advertisement

Advertisement