• Nov 15 2024

'உங்கள் அன்பையும் ஆசிகளையும் தேடுகிறேன்' திடீர் திருமணத்தில் இணைந்த அமலாபால்! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படங்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் அமலாபால்.தமிழில் மைனா என்னும் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானார். இப்படத்தைத் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்தன.

மேலும் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கிய தெய்வத் திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இயக்குநர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

இந்நிலையில் அமலா பாலின் நெருங்கிய நண்பரான ஜனா தேசாய் என்பவரை திருமணம் செய்துள்ளார். 


அத்துடன், எங்களை ஒன்றிணைத்த அன்பையும் அருளையும் கொண்டாடுகிறோம்... என் தெய்வீக ஆண்மையுடன் திருமணம் செய்துகொண்டேன்... உங்கள் அன்பையும் ஆசிகளையும் தேடுகிறேன்.. என பதிவிட்டு தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ஏற்கனவே, அமலா பாலின் பிறந்தநாளில் அவருக்கு முத்தம் கொடுத்து லவ் புரோபோஸ் செய்த காட்சிகளை நாம் பார்த்திருப்போம். தற்போது அமலா பாலின் இரண்டாவது திருமணம் குறித்த புகைப்படங்கள்  இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement