• Sep 21 2024

'ஆண்டவர் தரிசனம் சூப்பர் அவரை சுத்தி போடனும்'-விக்ரம் படம் பற்றி பிக்பாஸ் பிரபலங்கள் கொடுத்த விமர்சனம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் நடிப்பில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இன்றைய தினம் வெளியாகியிருந்த திரைப்படம் தான் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிரூத் இசையில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல விமர்சனம் குவிந்து வருகின்றது.

இந்த நிலையில் இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தமது விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் பிரபலமும் கவிஞருமான சினேகன் தனது மனைவியுடன் இப்படத்தை பார்க்கச் சென்றுள்ளார்.

படத்தை பார்த்த அவர் கூறியதாவது நாலு வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகிய இந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு மீறிய அவற்றியை கொடுத்திருக்கிறது. ஆண்டவர் இந்த தலைமுறையினருக்கு வழிவிட்டு தானும் சிறப்பாக நடிச்சிருக்கிறாரு. நமக்கு ரொம்ப நெருக்கமான இவர் இப்படி பயங்கரமா நடிச்சிருக்கிறாரு பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கு. எப்பவுவே அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கு. தான் மட்டும் நடிக்கல கூட இருக்கிறவங்களையும் நடிக்க வச்சிருக்கிறாரு என்று கூறினார்.

அதே போல பிக்பாஸில் கலந்து கொண்ட நடிகை ஆர்த்தியும் தனது கணவருடன் படம் பார்க்கச் சென்றிருந்ததோடு படத்தை பற்றி கூறிய விமர்சனமாவது ஸ்கிப்ட்ல இருந்து நடிப்பில இருந்து எல்லாமே சூப்பராக இருக்கு எத்தனை ஹீரோ என்று தெரியாத அளவுக்கு அவ்வளவு பேருக்கும் ஸ்பேஸ் கொடுத்து எடுத்திருக்கிறாங்க.குடும்பத்தோட பார்க்க வேண்டிய படம் குழந்தை சென்டிமென்ட் நிறைய இருக்கு ஆண்டவர் தரிசனம் சூப்பர் அவரை சுத்தி போடனும் என்று தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்:

  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement