• Nov 13 2024

விஜய் தேவரகொண்டாவை காதல் கிசுகிசு- முதல்முறையாக வாய்திறந்த பிரபல நடிகை..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ராஷ்மிகா முதல் முறையாக 'விஜய் தேவரகொண்டா உடன் காதலா' என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள விடயம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலிக்கிறார்கள் என நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் அது பற்றி வெளிப்படையாக இதுவரை பேசியது இல்லை.



இருப்பினும் அவர்கள் பற்றிய கிசுகிசு தொடர்ந்து வந்துகொண்டு தான் உள்ளது. இருவரும் திருமணம் செய்ய போகிறார்கள் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது முதல் முறையாக ராஷ்மிகா இது பற்றி ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.



"எங்களை பற்றி நீங்கள் என்ன வேண்டுமானலும் பேசுங்க. ஏனென்றால் நாங்கள் public figures. எங்களது பர்சனல் லைப் பற்றி யாரும் பேச கூடாது என எதிர்பார்க்க முடியாது. அத்தோடு  நீங்கள் இதை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள், ஆனால் எந்த ஒரு முடிவுக்கும் வந்து விடாதீர்கள்.

"நான் உறுதியாக அறிவிக்காத வரை, அது உண்மை இல்லை" என அவர் தெரிவித்து இருக்கிறார்.


Advertisement

Advertisement