குறைந்த பட்ஜெட்டில் 100 கோடி வசூலை தட்டி தூக்கி லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் மிகப்பெரிய உயரத்திற்கு சென்று விட்டார். இவர் அடுத்து என்ன படம் எடுப்பார் என ஆர்வத்துடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அதற்கு முன் மறுபடியும் ஒரு 100 கோடியை வசூலிக்க வேண்டும் என பிரதீப் கையில் எடுத்திருக்கும் கதை பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது. லவ் டுடே தயாரிப்பாளருடன் ஒரு படத்தை இயக்கி இவரே கதாநாயகனாக நடிக்கிறார்.இந்த படம் இன்ஜினியரிங் மாணவர்களின் கஷ்டங்களையும் மகிழ்ச்சிகளையும் படமாக எடுக்க இருக்கிறார். இதற்கு அடுத்து ஜெயம்ரவி உடன் மீண்டும் சேர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
இப்படி வரிசையாக அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கும் பிரதீப் ரங்கநாதன் டாப் நடிகர்களுக்கு கடும் போட்டியாக மாறி உள்ளார்.
லவ் டுடே படத்திற்கு பிறகு அவர் இயக்கி நடிக்க இருக்கும் படத்தில் இன்ஜினியரிங் மாணவராக என்ட்ரி கொடுத்து, இளசுகள் விரும்பும் வகையில் படத்தை எடுத்து மறுபடியும் 100 கோடியை தட்டி துங்க வேண்டும் என்று வெறித்தனமாக ஸ்கிரிப்ட்டை தயாரித்துக் கொண்டிருக்கிறாராம் என்று தகவல் கூறப்படுகிறது.எனவே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
Listen News!