• Nov 17 2024

நான் கதாநாயகனாக நடித்தால் கலாய்பாங்க என நிறையப்பேர் சொன்னாங்க; கஸ்டம் என நினைத்தால் மலையேற முடியாது- இயக்குநர் பிரதீப்பின் கலக்கல் ஸ்பீச்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியின் 'கோமாளி' படத்தை தொடர்ந்து இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார்.  

நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி இருந்தனர்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீட்டில் உருவாகி வெளியான இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த நவம்பர்மாதம்  வெளியாகி உள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே லவ் டுடே 100 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டு வரும் இந்நிலையில் இப்பட விழாவில் உரையாற்றிய இப்படத்தின் இயக்குநரும் நாயகனுமான பிரதீப் ரங்கநாதன், “லவ் டூடே 100 கோடி ருபாய் உலகளவில் வசூலித்துள்ளது. 

படத்தில் நான் கதாநாயகனாக நடித்து மொக்கை வாங்கினால் திரும்பி எழுவது கஷ்டம், கலாய்ப்பாங்க என நிறைய பேர் சொன்னார்கள். சிலர் இந்த படம் ஒரு மலைபோன்றது என்றார்கள். ஆனால் நான் யோசித்தது என்னவென்றால், மலையேறுவது கஷ்டமா? மலையேற என்ன வேண்டும்? உபகரணங்கள், பயிற்சி, உடல்பலம், ஆக்ஸிஜன் இதெல்லாமா? இல்லை. மலை ஏற முதலில் மலை வேண்டும். அந்த மலையை முதலில் செட் பண்ண வேண்டும். அதுதான் லவ் டுடே படம் ,

இந்த படத்தினை எப்போதும் நான் மறக்க மாட்டேன் .பறங்கிமலை ஏறிவிடலாம், ஆனால் எவரெஸ்ட் சிகரம் ஏறுவது ரொம்ப கஷ்டம். நீங்களும் உங்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு இருக்கீங்க என நினைத்தால்  ஒரு பெரிய மலை ஏறுவது கஷ்டமா போய்விடும் எனவே நல்லா யோசிச்சுக்கோங்க” என கூறி இருந்தார்.

மேலும் தன்னை நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளர்களுக்கும், லவ் டுடே படக்குழு அனைவருக்கும்  நன்றி தெரிவித்தார்.

Advertisement

Advertisement