• Nov 17 2024

லவ் டுடே இயக்குநரை விளாசிய கோமாளி பட நடிகை-திடீரென ஆதரவு கொடுத்த பெண்கள்...நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

லவ் டுடே படத்தில் ஒரு பிரபல நடிகையை பதம் பார்க்கணும்னு தனது நண்பர்களுடன் பேசும் காட்சியை எப்படி காமெடி காட்சி என வைக்கலாம் என ஆர்ஜே ஆனந்தி திட்டித் தீர்த்துள்ளார்.

கோமாளி படத்தை இயக்கிய இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 70 கோடிக்கும் மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. இளைஞர்களின் பல்ஸ் பிடித்து இயக்குநர் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள், அவர்கள் செய்யும் தவறுகள், அதை திருத்திக் கொண்டு வாழ்வது எப்படி என்பதாக லவ் டுடே படத்தை இயக்கி இருந்தார்.

மேலும்  கோமாளி படத்திலேயே நடிகர் ரஜினிகாந்த் பற்றிய மோசமான விமர்சனங்கள் ரஜினி ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. லவ் டுடே படம் வெளியான நிலையில், பிரதீப் ரங்கநாதனின் பழைய பேஸ்புக் போஸ்ட்டுகள் ஸ்க்ரீன் ஷாட்டுகளை எடுத்துப் போட்டு சமூகவலைத்தளங்களில்  நெட்டிசன்கள் வெளுத்து வாங்கினர். கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி உள்ளிட்ட பிரபலங்கள் பற்றியும், விஜய், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட சினிமா பிரபலங்களையும் மோசமாக பேசியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இளம் வயதில் சில தவறுகளை செய்துள்ளேன் என்றும் கெட்ட வார்த்தைகளுடன் வெளியாகும் பதிவுகள் எடிட் செய்யப்பட்டவை என்றும் தினம் தோறும் தன்னை மாற்றிக் கொண்டு வருவதாகவும், தனது பழைய தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கிறேன் என பிரதீப் ரங்கநாதன் அந்த பிரச்சனைக்கு  திடீரென முற்றுப்புள்ளி வைத்தார்.

பரிதாபங்கள் யூடியூப் சேனலில் பணியாற்றி வந்த ஆர்ஜே ஆனந்தி, தனியாக தி புக் ஷோ எனும் புத்தக விமர்சன யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அத்தோடு லேட்டஸ்ட்டாக காமசூத்ரா புத்தகத்தை விமர்சித்துள்ள ஆர்ஜே ஆனந்தி தமிழ் சினிமாவில் பெண்களை இன்னமும் இழிவாக சித்தரிப்பதாக பேசிய நிலையில், லவ் டுடே பட காட்சிகளை வெளிப்படையாக விளாசித் தள்ளி உள்ளார்.


இப் படத்தின் நாயகி இவானாவுக்கும் அவரது தங்கைக்கும் ஆபாச மெசேஜ் தான் அனுப்பவில்லை என்பதை நிரூபித்து பிரதீப் ரங்கநாதன் நல்லவன் ஆகிறான். ஆனால், ஒரு பிரபல நடிகையை போடணும்னு எப்படி சொல்லலாம். இது காமெடி என எப்படி ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அத்தோடு பெண்களை இன்னமும் இழிவாகவே சினிமாவில் சித்தரிப்பதை எத்தனை காலம் தான் பொறுத்துக் கொள்ள வேண்டும் என கேள்வி எழுப்பி உள்ளார்.

லவ் டுடே படத்தில் பல இடங்களில் ஆண்களை நல்லவர்களாகவும், பெண்களை மோசமாகவும் சித்தரித்தே காமெடி காட்சிகள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் விளாசி உள்ளார் ஆர்ஜே ஆனந்தி. டாக்டர் படத்தில் கோமதி என பெண் பெயரை கேவலமாக சித்தரித்து வைத்த காட்சிகளையும் குறிப்பிட்டு விளாசி உள்ளார் ஆர்ஜே ஆனந்தி.


அத்தோடு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் ஜெயம் ரவியின் தங்கையாகவும் யோகி பாபுவின் மனைவியாகவும் நடித்திருப்பார் ஆர்ஜே ஆனந்தி. ஆனாலும், தப்பு யார் செய்தாலும் தப்பு என எடுத்துக்காட்டி அவர் விமர்சித்திருப்பதை பார்த்த ஏகப்பட்ட பெண்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement