• Sep 20 2024

விக்னேஷ் சிவன் கூட்டணியில் லவ் டுடே ஹீரோ... பிரதீப் ரங்கநாதனுக்கு இத்தனை கோடி சம்பளமா... வெளியானது புதிய தகவல்...

subiththira / 8 months ago

Advertisement

Listen News!

குறும்படங்களை தயாரிப்பதன் மூலமும் மற்றும் அவர் நடிப்பு ,எடிட்டிங் , இயக்கம் போன்றவையால் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். லவ்  டுடே படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் . இப் படத்தின் மூலம் அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது .


அவரது சில குறும்படங்களை பார்த்து ஈர்க்கப்பட்ட ஜெயம்ரவி மற்றும் இன்டர்நேஷனல் ஆகியோரிடமிருந்து அவர் தனது முதல் திரைப்பட இயக்குனராக அறிமுக வாய்ப்பைப் பெற்றார்.  கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் பிரதீப் ரங்கநாதன்.


இதனை அடுத்து இவரை இயக்கி நடித்திருந்த லவ் டுடே திரைப்படம் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. ஏஜிஎஸ் தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார் தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC) என்ற  படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார்.


இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்கிறார் மேலும் படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.   இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன், LIC படத்தில் நடிக்க ரூபாய் 15 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

Advertisement

Advertisement