• Sep 21 2024

முன்னணி ஹுரோக்களின் படங்களை விட முதல் நாளே வசூலில் மாஸ் காட்டும் லவ் டுடே திரைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறும்படங்களில் நடித்து வந்தவர் தான் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். இதன் பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார். இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு நல்ல வசூலையும் பெற்றுக் கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் நேற்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் லவ் டுடே.இப்படத்தை இவர் இயக்கியிருந்ததோடு இவரே அதில் நடித்திருந்தார்.இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார்.


இப்படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். நேற்று வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 4.5 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.இதுவரை பல முன்னணி நட்சத்திரங்களால் கூட செய்யமுடியாத வசூலை லவ் டுடே திரைப்படம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement