• Sep 20 2024

OTTயில் வெளியாகப்போகும் லவ் டுடே திரைப்படம்- எப்போது தெரியுமா?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளிவந்து பலரது பாராட்டுக்களை பெற்று வருவது மாத்திரமல்லாமல், மாபெரும் வசூல் சாதனையையும் புரிந்து கொண்டிருக்கும் திரைப்படம் 'லவ் டுடே'.

தமிழ் சினிமாவின் புது இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக இவானா நடித்துள்ளார். மேலும் இவரோடு இணைந்து சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவ்வாறாக இப்படத்திற்கு கிடைத்து வரும் பெரியளவிலான வரவேற்பை பார்த்த 'வாரிசு' படத் தயாரிப்பாளரான தில் ராஜு, இதன் டப்பிங் உரிமையை வாங்கி தெலுங்கில் டப் செய்து இப்படத்தினை வெளியிட்டார்.

ஒரேஒரு கான்செப்ட் தான் படத்தை இளைஞர்கள் கொண்டாடி வருகிறார்கள்.அத்தோடு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 70 கோடி வரை வசூல் சாதனை செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் வந்துள்ளது.

அதாவது படம் டிசம்பர் 2ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.



Advertisement

Advertisement