• Sep 20 2024

நயன் – விக்கி தம்பதியருக்கு கிப்ட் அனுப்பிய லவ் டுடே பிரதீப்..! என்ன தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர். இவர்கள் கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். 

இதனை தொடர்ந்து சில மாதங்களிலேயே வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த இவர்கள் சமீபத்தில் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை மிகவும் எளிமையான முறையில் கொண்டாடினர்.

இதனை முன்னிட்டு அவர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் அவர்களது குழந்தைகளின் புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டிருந்தனர். அப்புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் கொடுத்த சர்ப்ரைசால் எமோஷனலான நயன்தாராவின் வீடியோவும் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் கோமாளி, லவ் டுடே உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி பிரபல இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் பிரதீப் ரங்கநாதன் விக்கி – நயன் தம்பதியினரின் திருமண நாளுக்கு வாழ்த்து தெரிவித்து கிப்ட் அனுப்பி வைத்திருக்கிறார். அதில் ஸ்வீட்டுடன் பிரதீப் அனுப்பியுள்ள கடிதத்தின் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார். அப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement