கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் அனைவரையும் கொண்டாட வைத்த திரைப்படம் “லவ்டுடே “. பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இன்றைய காலகட்டத்தில் இருக்கும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 90 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது என்றே கூறலாம். தமிழில் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும், இந்தி ரீமேக் உரிமையை ‘phantom films’ நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தியில் லவ் டுடே திரைப்படம் ரீமேக் ஆக விருக்கும் நிலையில், அதனை பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கவில்லையாம். அவருக்கு பதிலாக இந்தியில் ஒரு பெரிய ஒரு இயக்குநர் இயக்கவுள்ளாராம். படத்தில் வேறொரு இளம் இந்தி நடிகர் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்.
மேலும், லவ் டுடே தமிழ் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் அவரே இயக்கி நடித்திருப்பார். படத்தை பார்த்த பலரும் இவரை விட இந்த படத்தில் யாரும் நன்றாக நடித்துவிட முடியுமா..? என்கிற அளவிற்க்கு அருமையாக நடித்திருப்பார்.
எனவே லவ் டுடே இந்தி ரீமேக்கில் அவர் நடிக்கவும் இல்லை, இயக்கவும் இல்லை என்ற தகவல் ரசிகர்ளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!