ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த திரைப்படம் தான் லவ் டுடே. சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படத்தில் இவானா, யோகிபாபு, ரவீனா ரவி, சத்யராஜ், ராதிகா சரத்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தில் இவரைவிட யாரும் சிறப்பாக நடித்திருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு பிரதீப்பின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன.
இப்படம் இவ்ளோ பெரிய வெற்றிப்படமாக அமைந்ததற்கு இதன் கதை தான் காரணம். படம் பார்க்கும் ஒவ்வொரு இளைஞரும் தங்களை படத்துடன் கனெக்ட் செய்துகொள்ளும் படியான காட்சிகள் அதிக அளவில் படத்தில் உள்ளதால் தான் இப்படம் இந்த அளவுக்கு வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் வெளியிட்டது. முதலில் தமிழ்நாட்டில் மட்டும் வெளியிடப்பட்ட இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்ததால், ஒருவாரம் கழித்து உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. அதேபோல் தற்போது பிறமொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ரிலீசானது முதல் பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வரும் இப்படம், முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறது.வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது அதைவிட 10 மடங்கு அதிக வசூலை ஈட்டி உள்ளது.
அதாவது இதுவரை லவ் டுடே திரைப்படம் உலகளவில் 50 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. புதுமுக நடிகர் நடித்துள்ள படத்துக்கு இவ்ளோ பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது இதுவே முதன்முறை. அதுவும் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் 42 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி வசூலை இப்படம் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!