• Sep 20 2024

தேவதை போல் ஜொலிக்கும் லொஸ்லியா…வைரலாகும் இன்ஸ்டாப் பதிவு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாகத் திகழ்பவர் நடிகை லொஸ்லியா மரியநேசன். இலங்கையைச் சேர்ந்த இவர் 2015-ஆம் ஆண்டு தொடக்கம் 2019-ஆம் ஆண்டு வரை சக்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் கடமையாற்றினார். பின்னர் தன் பணியில் இருந்து விலகி 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற பிரபல நிகழ்ச்சியின் சீசன் 3 இல் போட்டியாளராக பங்குபற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பங்குபற்றியதன் மூலம் பல ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டு தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டார். மேலும் இவர் 2020-ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடித்த 'பிரண்ட்ஷிப்' என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக திரைப்படத்துறையில் அறிமுகமானார். இத்திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இவர் 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற 'ஸ்டார்ட் மியூசிக் 2' நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். அதுமட்டுமல்லாது இவர் 'ப்ளேஸ்ஸோ' என்ற சோப்பு விளம்பரத்தில் நடித்துள்ளார். இவ்வாறாக விளம்பரப் படங்கள், திரைப்படங்கள் என பிஸியாக இருக்கும் லொஸ்லியா சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஒருவர். அதில் தனது புகைப்படங்களை பகிரும் வழக்கத்தை வாடிக்கையாகக் கொண்டவர்.

இந்த நிலையில் இவர் தற்போதும் புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். இப்புகைப்படங்களில் இவர் அழகிய தேவதை போன்று ஜொலிக்கின்றார். அது மட்டுமன்றி புகைப்படங்களிற்கு மேலே 'my happy palce' எனப் பதிவிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இவர் தற்போது ஸ்ரீலங்காவில் நிற்கின்றாரா என கமெண்டுகளில் கேட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது தமது லைக்ஸ்களையும் அள்ளிக் குவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement