விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர் தீபக்.
இவர் சின்னத்திரை நடிகர் மட்டுமல்ல, பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 உட்பட பல நிகழ்ச்சிகளை இதற்க்கு உதாரணமாக கூறிக்கொண்டே போகலாம்.
இவருக்கு சின்னத்திரையில் அடையாளம் தேடி தந்த சீரியல்களில் ஒன்று தென்றல். இந்த சீரியல் சன் டிவியில் பல ஆண்டுகள் சூப்பர்ஹிட்டாக ஓடியது இதன்பின் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் தமிழும் சரஸ்வதியும் எனும் சீரியலில் நடித்து வருகிறார்.
நடிகர் தீபக் கடந்த 2008ம் ஆண்டு சிவரஞ்சனி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.இந்த நிலையில் தீபக் தன்னுடைய மனைவியுடன் இணைந்து நடிகர் அஜித்தை சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!