கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான விஜய் இப்போது லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.இப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இவருடைய மகனான ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.அதற்காக தனது முதல் படத்தின் வேலைகளை ஆரம்பித்து விட்டார்.
வெளிநாட்டில் சினிமா மேக்கிங் பற்றி படித்த சஞ்சய்யின் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றது.யாரிடமும் உதவி இயக்குநராக வேலை பார்க்காத சஞ்சய், முதல் படத்திலேயே பிரம்மாண்டமான கூட்டணியில் இணைந்துள்ளார். லைகா தலைவர் சுபாஸ்கரன் முன்னிலையில் ஜேசன் சஞ்சய் கையெழுத்திட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இதில் விஜய் சேதுபதி அல்லது துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால், கடைசியாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கவின் தான் சஞ்சய் இயக்கும் படத்தின் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள படம் பான் இந்தியா ஜானரில் ரிலீஸாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்பட மொத்தம் 10 மொழிகளில் இந்தப் படத்தை இயக்கவுள்ளாராம்.
சஞ்சய்யின் முதல் படம் அனைத்து மொழிகளிலும் வெளியானால், அது அவரது கேரியரில் சிறப்பான சம்பவமாக இருக்கும் என லைகா நிறுவனமும் ஓகே சொல்லிவிட்டதாம். ஆனாலும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!