நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதத்தில் வெளியான ஜெயிலர் படம் அவருக்கு சிறப்பான வெற்றியை கொடுத்துள்ளது. இந்தப் படம் சர்வதேச அளவில் வெளியாகி சிறப்பான வசூலையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால், சுனில், வினாயகன், வசந்த் ரவி, மிர்ணா உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள நிலையில், படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கியிருந்தார்.இந்தப் படம் மொத்தமாக 600 கோடி ரூபாய் வரை வசூலித்தது.
இதனை அடுத்து தனது 170 படத்தில் நடிக்க கமிட்டாகி விட்டார்.தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றது.இது தவிர தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் ரஜினி நடித்துள்ள லால் சலாம் திரைப்படம், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் தலைவர் 170 படத்தின் ஷூட்டிங்கை தொடங்க படக்குழு ரெடியாகிவிட்டது.
கடந்த மாதம் இறுதியில் தலைவர் 170 படத்தின் பூஜை சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் சைலண்டாக நடந்து முடிந்தது. இதன் தொடர்ச்சியாக அக்டோபர் முதல் வாரத்திலிருந்து தலைவர் 170 படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம். தலைவர் 170 ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை முடித்துவிட்ட ஞானவேல், இந்தப் படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், நடிகைகளையும் கன்ஃபார்ம் செய்துவிட்டாராம்.
நாளை முதல் வெளியாகும் இந்த அறிவிப்பில் தலைவர் 170ல் ரஜினியுடன் நடிப்பவர்கள் உட்பட டெக்னிக்கல் டீம் பற்றிய அப்டேட்டும் வெளியாகிறதாம். அதன்படி அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், மஞ்சு வாரியர் ஆகியோர் தலைவர் 170 படத்தில் கமிட்டாகியுள்ளார்களா இல்லையா என்பது விரைவில் தெரியவரும்.
அதேபோல் தலைவர் 170ல் அனிருத் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். அவரைத் தொடர்ந்து மற்ற டெக்னிக்கல் டீம் பற்றிய அப்டேட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த அப்டேட் அனைத்தும் அபிஸியலாக வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
Listen News!