அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக்கி வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் நடந்துள்ள நிலையில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை எடிட் செய்து பார்த்தபோது வெறும் ஒரு மணி நேர காட்சிகள் மட்டுமே வந்துள்ளதாக லைகா நிறுவனம் அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது
ஏற்கனவே அஜித் சம்பளம் உள்பட இந்த படத்தின் பட்ஜெட் ரூ.200 கோடி செலவு செய்துவிட்ட நிலையில் இன்னும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் காட்சிகள் படமாக்கப்பட வேண்டும் என்றால் பட்ஜெட்டில் அதிக செலவாகும் என்பதால் லைக்கா நிறுவனம் அதிரடி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அஜித்துக்கு இந்த படத்தில் 120 கோடி சம்பளமும் மகிழ்திருமேனிக்கு ரூ.25 கோடி சம்பளமும் பேசப்பட்டுள்ள நிலையில் தற்போது பட்ஜெட் அதிகமாகியுள்ளதை காரணம் காட்டி இருவரது சம்பளத்தையும் குறைக்க லைக்கா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அஜித்துக்கு 90 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்க முடியும் என்று லைகா கூறிவிட்டதாகவும் மகிழ்திருமேனிக்கு 5 கோடி ரூபாய் மட்டும் தான் சம்பளம் என்று கூறிவிட்டதாகவும் தெரிகிறது.
அஜித், மகிழ்திருமேனி ஆகிய இருவரால் தான் அதிக செலவாகிவிட்டது என்றும், படப்பிடிப்பு தாமதமானதற்கும், ரத்து செய்வதற்கும் இருவர் தான் காரணம் என்று லைக்கா நிறுவனம் குற்றம் சாட்டி சம்பளத்தை குறைத்துள்ளதை அடுத்து அஜித் மற்றும் மகிழ்திருமேனி ஆகிய இருவரும் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் லைக்கா தான் எடுத்த முடிவிலிருந்து மாறப்போவதில்லை என்றும் 200 கோடிக்கு மேல் பட்ஜெட் சென்றால் போட்ட முதலீட்டை எடுக்க முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அடுத்து தொடருமா என்ற சந்தேகம் கூட ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
Listen News!