சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பு விரைவில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் ஒரு சின்ன சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகவும் ரஜினிக்கு ஆப்பு வைக்கும் வகையில் லைக்கா நிறுவனம் காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுவது தான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
’வேட்டையன்’ படத்தின் தொடங்கும் போது இயக்குனர் ஞானவேல் ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டை கூறியதாகவும் ரஜினி சம்பளம் இல்லாமல் அவர் கூறிய பட்ஜெட் தற்போது முடிந்து விட்டதாகவும் இன்னும் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு இருக்கும் நிலையில் பட்ஜெட் இன்னும் அதிகமாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இதுவரைக்கும் செலவான பட்ஜெட் தொகையை ஞானவேல், லைக்கா தரப்பிடம் சமர்ப்பித்திருக்கும் நிலையில் பட்ஜெட்டின் தொகையை பார்த்து லைக்கா அதிர்ச்சி அடைந்ததாகவும் இதனை அடுத்து குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் ஏன் முடிக்கவில்லை என இயக்குனரிடம் கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் பட்ஜெட்டை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஒரே வழி ரஜினியின் சம்பளத்தை குறைப்பது தான் என்றும் அதனால் ரஜினியிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பட்ஜெட்டை மீறி செலவு சென்று கொண்டிருப்பதால் ரஜினியின் சம்பளத்தை ஒரு பத்து சதவீதம் குறைத்தால் கூட ஈடுகட்டி விடலாம் என்றும், ரஜினி தவற மற்ற அனைவருக்கும் குறைந்த சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதால் அவர்களுடைய சம்பளத்தில் கை வைக்க முடியாது என்றும் ரஜினிக்கு லைக்காக புரிய வைத்துக் கொண்டிருப்பதாகவும் ரஜினியும் அதற்கு ஒப்புக் கொள்வார் என்று கூறப்படுகிறது.
ரஜினி அடுத்ததாக நடிக்க இருக்கும் ’தலைவர் 171’ திரைப்படத்தில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படும் நிலையில் ’வேட்டையன்’ படத்தின் அவரது சம்பளம் ரூ.100 கோடிக்கும் குறைவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மொத்தத்தில் பட்ஜெட் குறைப்பு என்ற பெயரில் லைக்கா நிறுவனம் ரஜினிக்கு ஆப்பு வைத்துள்ளதாக தான் கோலிவுட் திரையுலகினர் கூறி வருகின்றனர்.
Listen News!