சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’வேட்டையன்’ கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ மற்றும் அஜித் நடித்துவரும் ’விடாமுயற்சி’ ஆகிய மூன்று மாஸ்
நடிகர்களின் படங்களை ஒரே நேரத்தில் லைகா
நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஏற்கனவே ’லால் ஸ்லாம்’ உள்பட
ஒரு சில படங்கள் சரியாக
ஓடாததால் பொருளாதார சிக்கலில் இருக்கும் லைகா நிறுவனம் மேற்கண்ட
மூன்று படங்களை இயக்கி வரும் இயக்குனர்கள் திட்டமிட்டதை விட அதிக செலவு
வைக்கிறார்கள் என்றும் குறிப்பாக ’இந்தியன் 2’ படத்திற்கு இரு மடங்கிற்கு மேல்
செலவு செய்யப்பட்டு விட்டதாக தெரிகிறது.
இதனால் லைகா நிறுவனம் தற்போது
பொருளாதார சிக்கலில் இருப்பதால் ’வேட்டையன்’ ’இந்தியன் 2’ மற்றும் 'விடாமுயற்சி’ ஆகிய மூன்று படங்களின்
இயக்குனர்களை அழைத்து இனிமேல் என்னால் அதிகமாக செலவு செய்ய முடியாது, முடிந்தவரை பட்ஜெட்டை குறைத்து படத்தை முடிக்க பாருங்கள் என்று சுபாஷ்கரன் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இதற்கு ’வேட்டையன்’ மற்றும் ’விடாமுயற்சி’ படங்களின் இயக்குனர்களான ஞானவேல் மற்றும் மகிழ் திருமேனி ஒப்புக்கொண்டாலும் ஷங்கர் மட்டும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தான் நினைத்தபடி படம்
வந்தே ஆக வேண்டும் என்று
பிடிவாதமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த மூன்று படங்கள் முடிவடைந்து ரிலீஸ் ஆனால் தான் லைகா நிறுவனத்தின்
பொருளாதார சிக்கல் தீரும் என்றும் அதனால் இந்த மூன்று படங்கள்
முடியும் வரை வேறு படங்களை
தயாரிக்க லைகா நிறுவனம் திட்டமிடவில்லை
என்றும் கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் மூன்று
படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால்
இந்த மூன்று படங்களால் மிகப்பெரிய லாபம் லைகா நிறுவனத்திற்கு கிடைக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!